2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அட்லி இயக்கத்தில் ரஜினி?

Freelancer   / 2025 ஜனவரி 28 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவர் இயக்குநர் அட்லி. ஷாருக் கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அவரது காலடி தடத்தை பதித்தார். ஜவான் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று உலகளவில் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்தது.

இதைத் தொடர்ந்து அவர் தமிழில் இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தியில் பேபி ஜான் என ரீமேக் செய்தார். இந்த திரைப்படத்தை அட்லி தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்தார்.

இந்நிலையில் அட்லி சல்மான் கானை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அதில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய அட்லி சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் "நான் ரஜினி சாரின் தீவிர இரசிகன், ரஜினி வெறியன் என்று சொல்லலாம். அவரைப் பார்த்து நிறைய கற்றுள்ளேன். மேடையில் எப்படி பேசுவது என்று. அவர் நடித்த தளபதி திரைப்படம் பார்த்துதான் சினிமாக்குள் வந்தேன்.

"நான் ரஜினி சாருடன் 300 நாட்கள் எந்திரன் படப்பிடிப்பில் இருந்துள்ளேன். அவருக்கு என்னை நன்றாக தெரியும். என்னை கண்ணா என அன்பாக அழைப்பார். எனக்கு 2-3 முறை ரஜினி சாரை வைத்து படம் இயக்க வாய்ப்பு வந்தது ஆனால் அவர்கள் சொன்ன கால அளவுக்குள் என்னால் தயாராக முடியவில்லை. சரியான கதை அமைந்தால் கண்டிப்பாக 100 சதவீதம் நானும் ரஜினி சாரும் ஒன்றாக பணியாற்றுவோம், இதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் கண்டிப்பாக என் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிப்பார்" என்று கூறியிருந்தார்.

தற்போது சல்மான் கான் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அட்லி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.AN

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X