2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்

Editorial   / 2021 மே 14 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக்காலமாக தமிழ் திரையுலகச் சேர்ந்த கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில்  2021 ஆம் ஆண்டு  நாம் இழந்த திரையுலக நட்சத்திரங்களின் பட்டியலை இங்கு காணலாம்.

இயக்குனர் எஸ்பி.ஜனநாதன் 

தமிழ் திரையுலகில் "இயற்கை" படத்தில் அடியெடுத்து வைத்து, பேராண்மை, பொதுவுடைமை என சமூக கருத்துகளை வலுவாக பேசியவர் இயக்குனர் எஸ்பி.ஜனநாதன். இவர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி மூளையில் ஏற்பட்ட கசிவினால்  உயிரிழந்தார்.

நடிகர் விவேக்

சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 59 வயதான நடிகர்  விவேக்கின் மறைவு திரைத்துறையினரை மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. 

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்தநாளான ஏப்ரல் 17ஆம் திகதி விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் தாமிரா

இரட்டைசுழி திரைப்படத்தில் அறிமுகமான எழுத்தாளர் தாமிரா கொரோனாவின் கோரப்பசிக்கு இரையானார். 52 வயதே ஆன தாமிரா ஏப்ரல் 27ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

நடிகர் பாண்டு 

ஜெய்,கம்பீரம்,கில்லி உள்ளிட்ட ஏராளமான தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் பாண்டு கடந்த மே மாதம் 6 ஆம் திகதி   காலமானர்.

74 வயதான அவர் கொரோனா பாதிப்பின் காரணமாக சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கே.வி.ஆனந்த்

பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் ஏப்ரல் 30ம் திகதி மறைந்தார். பத்திரிகையாளராக பயணத்தைத் தொடங்கிய அவர், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனை சென்ற அவருக்கு பின்னர் கொரோனா உறுதியானதால் அவரின் உடலை கடைசியில் யாரும் பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பது கொரோனாவின் கோரமுகத்தின் உச்சம்.

குணச்சித்திர நடிகர் ​செல்லத்துரை ஐயா

தமிழில் ’தெறி’, ’மாரி’, ’கத்தி’, ’நட்பே துணை’ போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் குணச்சித்திர நடிகர் செல்லதுரை. 84 வயதான இவர் கடந்த 30 ஆம் திகதி   மாரடைப்பால் உயிரிழந்தார். 


தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன்

கஜினி, சுள்ளான் உள்ளிட்ட பிரபல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மே 10ம் திகதி கொரோனாவால் உயிரிழந்தார். சூர்யா, தனுஷ் ஆகியோரின் திரைவாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர், இவரின் மறைவு தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்தது.


நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா

தமிழ் சினிமாவில் 500 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக மே 11ம் திகதி நெல்லையில் உயிரிழந்தார். சிவாவின் மறைவு, திரைத்துறையில் பலருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.
 

நடிகர் மாறன்

கில்லி, டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மாறன் கொரோனாத் தொற்றினால் கடந்த 11 ஆம் திகதி  காலமானார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .