2025 மே 17, சனிக்கிழமை

அது ரொம்ப கஷ்டங்க...

George   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பொலிவூட் இயக்குநர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், மீண்டும் நடிக்கும், பொலிவூட் நட்சத்திரம் தீபிகா படுகோனே, நடிப்பில் பன்சாலியை திருப்திபடுத்துவது சாதாரண விஷயமல்ல அவர் என்னை பாடாய்படுத்துகிறார், என கூறியுள்ளார்.

தீபிகா, தற்போது பன்சாலி இயக்கத்தில், பாஜிராவ் மஸ்தானி என்ற, சரித்திர கால திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படத்தில், ரண்வீர் சிங்கும் பிரியங்கா சோப்ராவும் நடிக்கின்றனர்.

பன்சாலியுடனான, தன் சினிமா அனுபவம் குறித்து, தீபிகா படுகோனே கூறும்போது, என் திரையுலக வாழ்க்கையில், பாஜிராவ் மஸ்தானி கண்டிப்பாக, மிகக் கடினமான திரைப்படம். அதில் நடிக்க, உடலளவிலும், மனதளவிலும், சிரமப்பட்டுதான் நடித்து வருகிறேன். 

சிறந்த நடிப்பை கொண்டு வர, இயக்குநர் பன்சாலி, என்னை பாடாய்படுத்துகிறார். அவருக்கு, எளிதில் திருப்தி ஏற்பட்டு விடாது. தான் நினைத்தது வரும் வரை, அவர் விடமாட்டார். நம்மில் உள்ள தெரியாத விஷயங்களை கூட, அவர் வெளிக்கொண்டு வந்து விடுவார். இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .