J.A. George / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை காஜல் அகர்வால் பேய் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அதுமாதிரியான படங்கள் அதிகளவில் வெளி வருகின்றன.
ஏற்கனவே நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, சமந்தா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் திகில் படங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் காஜல் அகர்வாலும் பேய் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை டீகே இயக்குவதாக கூறப்படுகிறது.
அவர் சொன்ன கதை காஜல் அகர்வாலுக்கு பிடித்து போனதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் மொத்தம் 4 கதாநாயகிகள் நடிப்பதாகவும், அதில் ஒருவர் காஜல் அகர்வால் என்றும் கூறப்படுகிறது.
இந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 minute ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
8 hours ago