Editorial / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழரான ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கியுள்ள, நாயை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்ட வித்தியாசமான திரைப்படமான அன்புள்ள கில்லியின் ‘Motion Poster’ தற்போது வெளியாகியுள்ளது.
லெபரேடர் நாய் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் அன்புள்ள கில்லியில் மைத்ரேயா, துஷாரா, வி.ஜே.ஆஷிக், சாந்தினி, மைம் கோபி, நாஞ்சில் விஜயன், கிருத்திகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில் நாயின் கதாபாத்திரத்தின் பெயர் கில்லி, அதுவும் விஜய் ப்பேனாக நடித்துள்ளது. மேலும் 5 நாய்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளன.
இந்தப் படத்தின் இயக்குநரான ஸ்ரீநாத் ராமலிங்கம், ஏற்கெனவே 2015 ஆம் ஆண்டு உனக்கென்ன வேணும் சொல்லு என்ற படத்தை இயக்கியிருந்தார். அவர் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படமே அன்புள்ள கில்லி.
கோலிவுட்டின் வளர்ந்து வரும் முன்னணி இளம் இயக்குநரான ஸ்ரீநாத், இந்தப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளதுடன், படக்குழு படம் தொடர்பில் முழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாயை நடிக்க வைப்பது அவ்வளவு இலகுவல்ல என்ற போதிலும், படக்குழு அனைவருக்கும் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் நாய்களை சிறப்பாக நடிக்கவைத்துள்ளனர்.
தனது நாயுடனான அனுபவத்தை வைத்தே ஸ்ரீநாத் இந்தக் கதையை எழுதியுள்ளார்.
படத்தில் விசுவல் எபக்ட் காட்சிகளும் நல்ல படியாக வந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கென விசேட கவனம் செலுத்தியதாக படக்குழு தெரிவிக்கின்றது.
இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்ரமணியம் மேற்கொண்டுள்ளதோடு, அரோல் கொரலி இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகையையும், பாடகியுமான ஆண்ட்ரியா மற்றும் பிரபல பாடகரும் இயக்குநரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். இதுவும் படம் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் தமிழ் படங்கள் வரிசையில் இணைந்துள்ள இப்படம் பெரிய வெற்றி பெறும் என படக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
13 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
23 minute ago