Editorial / 2024 நவம்பர் 06 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ.170 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் திகதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அமரன்’.
இந்தப் படத்தில் சாய் பல்லவி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் நாள் ரூ.45 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்தது. அண்மையில் படக்குழு சார்பில் வெற்றி விழா நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 6 நாட்களை கடந்த நிலையில், உலகம் முழுவதும் படம் ரூ.170 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ.115 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14-ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ஒரு வாரம் மற்ற படங்களில் ரிலீஸ் இல்லாததால் ‘அமரன்’ படத்தின் வசூல் இன்னும் கூடலாம் என கணிக்கப்படுகிறது.
12 minute ago
20 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
26 minute ago
34 minute ago