2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அமலாபாலின் வித்தியாசமான விளையாட்டு

Janu   / 2024 ஜனவரி 29 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது கணவருடன் விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை அமலா பால் தனது நீண்ட நாள் நண்பரான தேசாய் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் கர்ப்பமானதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

மேலும் கர்ப்பமாக இருக்கும் சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். இந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து அவர் தனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்ற விளையாட்டை விளையாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை நீங்களே கூறுங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார். சிலர் ஆண் குழந்தை என்றும் சிலர் பெண் குழந்தை என்றும் சிலர் இரட்டை குழந்தைகளை என்றும் இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அமலாபால் பெண் குழந்தை பொம்மையின் அருகிலும் அவரது கணவர் ஆண் குழந்தையின் பொம்மையின் அருகிலும் நின்று எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X