Freelancer / 2022 பெப்ரவரி 20 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், தெழுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்திலும் முன்னணியாக திகழும் நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் படம் விரைவில் வெளியாக இருக்கின்றது.
இந்த நிலையில் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
இவருடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
முதல் நாள் படப்பிடிப்பில் அமிதாப் கலந்து கொண்டதை மிகவும் மகிழ்ச்சியோடு நினைவுபடுத்தி “அமிதாப்பச்சனோடு நடிப்பது எனக்குக் கனவு போல் இருக்கிறது” என்று தீவார் படத்தில் அமிதாப்பின் கலக்கலான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாசின் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படம் விஞ்ஞானமும், கற்பனையும் சேர்ந்த திரைக்கதையாக உருவாக இருக்கிறது. (R)
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago