Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
A.K.M. Ramzy / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுபம் கெர் தயாரித்த ராஞ்சி டைரிஸ் படம் மூலம் அறிமுகமானவர் சவுந்தர்யா
சர்மா. இந்த படத்துக்காக சில பட விழாக்களில் அறிமுக நடிகை விருதைப் பெற்றவர். பல் மருத்துவரான இவர், நடிப்பு ஆர்வம் காரணமாக, தேசிய
நாடகப்பள்ளியில் பயின்றார். சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறார். இவர் தனது அடுத்த பட வேலைகளுக்காக, அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள பிலிம் அகாடமியில்
நடக்கும் ஒர்க்ஷொப்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். கொவிட்-19 வைரஸ் காரணமாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்கு சிக்கியுள்ளார்.
அமெரிக்காவில் கொவிட்-19 வைரஸ் கோரதாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நியூயோர்க்கில் சிக்கியுள்ள சவுந்தர்யா, மாணவர்களை மீட்க இந்திய அரசு உதவ
வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ‘சுமார் 400 மாணவர்கள் இங்கு சிக்கியுள்ளனர். வாழ்வதற்கு கடினமான சூழல் நிலவுகிறது. ஒவ்வொருவருக்கும் சவாலான நேரம்.
சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள். இந்தியத் தூதரகம் அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை.
அதனால் மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago