2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் பேசிய விஜய்

Freelancer   / 2023 நவம்பர் 02 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் திகதி வெளியான லியோ திரைப்படம் ரூ. 540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் வியாழக்கிழமை (02) சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் கடைசியாக நடிகர் விஜய் பேசினார். தளபதி என்று ரசிகர்கள் தன்னை அழைப்பதற்கான அர்த்தத்தையும் விளக்கினார் விஜய்.

விழாவில் அவர்  “மக்கள் திலகம்னா ஒருத்தர்தான், புரட்சி கலைஞர் விஜய்காந்த்னா ஒருத்தர்தான், உலகநாயகன்னா ஒருத்தர்தான், சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான், தலனா அது ஒருத்தர்தான். அப்படித்தான் தளபதி.

தளபதினா என்னனு உங்களுக்கு தெரியும்ல. உங்களுக்கு கீழ வேலை செய்ற தளபதி நான். மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்” என்றும் “ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. அந்த காட்டுல காக்கா, கழுகு, முயல், மான் என எல்லாமே இருக்கு. காட்டுல இதெல்லாம் இருக்கும்ல, அதுக்கு சொன்னேன் பா. இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு சிலர் போறாங்க. வேல் வச்சுருக்கிறவர் முயலுக்கு குறி வைக்கிறார்.

இன்னொருத்தர் யானைக்கு குறி வைக்கிறார். இதுல யார் மாஸ் தெரியுமா? யானைக்கு குறி வச்சவர் தான் மாஸ். கைக்கு கிடைக்கிறது இல்லாம பெருசா குறி வச்சிருக்காருல்ல. அது மாதிரிதான் பெரிய விஷயங்களுக்கு ஆசைப்படணும். ஆசைப்படுறதுல என்னங்க தப்பு” என்றும் பேசியுள்ளார்

இதைத் தொடர்ந்து விஜய்யிடம் சில கேள்விகளுக்கு பதில் கேட்கப்பட்டது. அப்போது 2026 என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய், “2025 க்கு அப்றம் வர வருஷம் என்ன? உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடக்கப் போகுது. இன்னும் சீரியஸாவா… 2026 கப்பு முக்கியம் பிகிலு” என்று பதில் அளித்தார்.


2026 இல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு விஜய் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. அதை மனதில் வைத்துதான் விஜய் 2026 இல் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறியதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .