Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2021 மே 20 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.
இவர் அஜித், விஜய், கமல், தனுஷ் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தொழில் அதிபர் கௌதம் கிச்சலுவை கரம்பிடித்த அவர், திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் காஜல் கைவசம் பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கமல்ஹாசனின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா, கோஷ்டி போன்ற தற்போது உள்ளன.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது சினிமாவை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி சொன்னால் நடிப்பதை விட்டு விடுவேன். தற்போது எனது கணவரும், குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அதனால் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
4 hours ago
5 hours ago