2025 மே 14, புதன்கிழமை

இதெல்லாம் சகஜமப்பா...!

George   / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை சனா கான், “வஜா தும் ஹோ” என்ற திரைப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “வல்லவன்” திரைப்படத்தில் நயன்தாரா, உதட்டை சிம்பு கடித்து இழுத்தது போன்று, சனா கான் உதட்டை சர்மன் ஜோஷி கடித்து இழுத்திருக்கிறார். இதுதவிர, திரைப்படம் முழுக்க படுக்கை அறை காட்சிகள் நிறைந்திருக்கிறதாம். அதில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் சனா கான்.   

விஷால் பண்டியா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார். டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி திரையிட தயாரகியுள்ள நிலையில், தற்போது ​வெளியாகியுள்ள டீசர் பட்டையை கிளப்பி வருகிறது.   

“கதையை பாருங்கள். காட்சியாகப் பிரித்துப் பார்த்தால்தான் எதுவும் ஆபாசமாகத்தான் தெரியும். முத்தக்காட்சியும், நெருக்கமான காட்சியும் இப்போது சகஜமான ஒன்று. அதை குறிப்பிட்டு விவாதம் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. எந்தக் காட்சியாக இருந்தாலும் தணிக்கைக் குழு அனுமதிக்கிற அளவுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்கிறார் சனாகான்.    தமிழில்,“ஈ”,“சிலம்பாட்டம்”, “தம்பிக்கு இந்த ஊரு”, “பயணம்”, “ஆயிரம் விளக்கு”, “ஒரு நடிகையின் டைரி”, “தலைவன்” ஆகிய திரைப்படங்களில் சனாகான் நடித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .