2025 மே 21, புதன்கிழமை

இதுவரைக்கும் பார்த்த மாதவன் வேற... இனி வேற மாதிரி

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிச்சுற்று திரைப்பட நாயகன் மாதவனை தனது திரைப்படத்துக்காக முழுமையாக மாற்றுகிறாராம் இயக்குநர் சற்குணம். செப்டம்பரில் தொடங்கவுள்ள இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக சூரி ஒப்பந்தமரியுள்ளார்.

அடுத்ததாக சில முன்னணி நடிகைகளிடம் கோல்சீட் கேட்டு வருகிறார் சற்குணம். முன்னணி நடிகை யாராவது நடித்தால் திரைப்படத்தின் வியாபாரத்துக்கு உதவியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

விமல் நடித்த „களவாணி, வாகை சூடவா... திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சற்குணம், நய்யாண்டி, சண்டிவீரன் திரைப்படங்களை அடுத்து புதிய திரைப்படத்தை இயக்குவதற்கான கதை விவாதம் செய்து கொண்டிருந்தார்.

விமல்தான் அந்த திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நேரம் மாதவன் நடித்த இறுதிச்சுற்று திரைப்படம் வெளியாகி வெற்றிப்பெற்றதை அடுத்து, அவரை அணுகி ஒப்பந்தம் பண்ணிவிட்டார் சற்குணம்.

விமலுக்காக தயார் செய்து வைத்திருந்த கதையில் மாதவன் நடிக்க ஒப்பந்தமானதால் இப்போது கதையில் சில திருத்தங்களை செய்து கொண்டிருக்கிறார் சற்குணம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .