J.A. George / 2021 நவம்பர் 17 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை 44 நாட்கள் எபிசோட் ஒளிபரப்பாகி உள்ள நிலையில் இன்று 45வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.
மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்.
இவர்களைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் சிபி, தாமரைச்செல்வி, பாவனி என மொத்தம் 9 போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் இவர்களில் இசைவாணி மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
அவருக்கு அடுத்தபடியாக நிரூப் இருப்பதாகவும் மூன்றாவதாக குறைந்த ஓட்டுகள் உடன் இருப்பவர் தாமரைச்செல்வி எனவும் தெரியவந்துள்ளது.
இந்த மூவரில் ஒருவருக்கு தான் வெளியேற வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
31 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago