2025 மே 05, திங்கட்கிழமை

இந்தியன் திரைப்பட நடிகைக்கு கொரோனா

J.A. George   / 2021 நவம்பர் 02 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் இந்தியன் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகை ஊர்மிளா மடோன்கர்.

இவர் கடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி, சிவசேனாவில் இணைந்தார்.

இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

"எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமாக உள்ளேன். வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்." என அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X