Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவைச் சேர்ந்த புதுமுக நடிகை அதிதி நேற்று விருகம்பாக்கதில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. காரணம் நேற்று முன்தினம் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் 'நான் விடைபெறுகிறேன். என் மரணத்துக்கு யாரும் அழ வேண்டாம்' என்று பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அதிதியின் நண்பர்கள் வைத்தியசாலையில் கூடினர்.
இதுபற்றி அதிதியின் நண்பர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: கேரளாவைச் சேர்ந்த அதிதி, இயக்குநர் சாமியின் உதவியாளர் செல்வ கண்ணன் என்பவர் இயக்கும் 'நெடுநல்வாடை' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தை கிரவுட் பண்டிங் முறையில் 50 பேர் ஆளுக்கு ஒரு இலட்சம் போட்டு தயாரித்து வருகிறார்கள். இதன் படப்படிப்பு நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சுற்றி நடந்துள்ளது. முதலில் ஒருவர் அதிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவர் அதிதிக்கு காதல் தொல்லை கொடுக்கவே அவர் நீக்கப்பட்டு இன்னொருவர் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில் திரைப்படத்தின் இயக்குநர் செல்வ கண்ணனுக்கு அதிதி மீது ஒரு தலை காதல் ஏற்பட்டுள்ளது. அவர் தன் காதலை ஏற்கும்படியும், திருமணம் செய்யும்படியும் அதிதியை வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு அதிதி மறுத்து வந்துள்ளார். ஒரு நாள் விடுதி அறையில் தங்கியிருந்த அதிதியிடம் செல்வ கண்ணன் தன் காதலை மீண்டும் வற்புறுத்தியுள்ளார். அதிதி மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த செல்வ கண்ணன். அதிதியிடம் அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிதி அந்தப் திரைப்படத்திலிருந்து வெளியேறியுள்ளார். திரைப்படம் பாதியில் நின்றுள்ளது.
காதல் தோல்வி மற்றும் திரைப்படம் பாதியில் நின்றதால் கோபம் அடைந்த செல்வ கண்ணன் தொடர்ந்து அதிதிக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால் பயந்துபோன அதிதி நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், முதல்வரின் தனிபிரிவில் புகார் செய்துள்ளார்.
அதன் பிறகு 'பட்டதாரி' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்துள்ளார். செல்வ கண்ணன் பலமுறை பட்டதாரி படப்பிடிப்புக்கு சென்று அதிதியை மிரட்டியுள்ளார். அப்போது பட்டதாரி படக்குழுவினர் எங்கள் படப்பிடிப்பில் பிரச்சினை செய்ய கூடாது. தனியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்து அனுப்பி விட்டனர். இந்த நிலையில் கடந்த வாரம் அதிதி சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த செல்வ கண்ணனும் அவரது நண்பர்களும் அதிதியை மிரட்டியுள்ளனர். சிலர் அடித்தும் உள்ளனர்.
இதை பார்த்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். விரைந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் செல்வ கண்ணனை எச்சரித்து அனுப்பிவிட்டு அதிதியை காப்பாற்றியுள்ளனர். பின்னர் அதிதி விருகம்பாக்கம் பொலிஸில் செல்வ கண்ணன் மீது புகார் அளித்து அதற்கான ரசீதையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அதிதி ஒரு பெரிய இயக்குநரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த இயக்குநர் 'என் திரைப்படத்தில் நடிக்கும்போது உங்களுக்கு நான் பாதுகாப்பு தரமுடியும். எப்போதும் தர முடியாது. அதனால் உங்கள் பிரச்சினையை முடித்து விட்டு வாருங்கள்' என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர் செல்வ கண்ணனால் தன் சினிமா வாழ்க்கை வீணாகிறதே என்று கருதி தற்கொலைக்கு முடிவெடுத்து அதனை தனது பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் அதிதி. இந்த நிலையில்தான் அவர் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டதாக கூறுப்படுகிறது.
இதற்கிடையில் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. இயக்குநர் செல்வ கண்ணன் அதிதியிடம் மன்னிப்பு கேட்டு இனி தொந்தரவு தரமாட்டார் என்றும் அவரது திரைப்படத்தை அதிதி முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.
பெரிய இயக்குநர் திரைப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதற்காக பிரச்சினையை இத்துடன் முடித்துக் கொள்ள அதிதி தரப்பு விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிதி வயிற்றுவலி காரணமாகவே மருத்துவனையில் சேர்ந்துள்ளார் என்று கூறிவருகிறார்கள். இந்த சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
25 minute ago
33 minute ago
44 minute ago