2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இயக்குநராக களமிறங்குகிறார் சஞ்சய்

Freelancer   / 2023 செப்டெம்பர் 20 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் நடிப்பில் 2009-ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நா அடிச்சாச் தாங்க மாட்ட ’ பாடலில் ஜேசன் சஞ்சய்யின் நடனம் பலரது கவனத்தை த் ஈர்த்தது. அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்றார்.

அதனைத்தொடர்ந்து இயக்குநர்  பிரேமம் அல்போன்ஸ் புத்திரன், சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கு ஒருமுறை கதை கூறியிருந்த நிலையில், நடிப்பில் ஈடுபாடில்லை என்றும் இயக்குநராக விரும்புவதாகவும் கூறிய சஞ்சய், சில குறும்படங்களையும் இயக்கினார். சமீபத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருந்தது.

அதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்களை லைகா நிறுவனம் டிவிட்டரில்(எக்ஸ்க் ஸ் ) பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இப்படத்திற்கு நாயகனாக நடிக்க நடிகர் கவினை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X