Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 20 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத் தேடி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மாளவிகா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா மேனன்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரசிகர்கள் பலரும் இவரை மாளவிகா என்று அடையாளம் கண்டனர். எனவே, தன்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றிக் கொண்டார் நடிகை ஸ்வேதா மேனன்.
இன்று வரை ரசிகர்களால் மாளவிகா என்று அறியப்படும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் சினிமாவில் தனக்கு நேர்ந்த கசப்பான மற்றும் ஏமாற்றமான விஷயங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில் கசப்பான சம்பவம் என கூறிய பொழுது : நான் அந்த இயக்குனரின் பெயரை குறிப்பிட முடியவில்லை. கதை சொல்லும் பொழுது ஒரு மாதிரி சொன்னார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் அது வேற மாதிரி இருந்தது.
ஆனாலும் படத்தை ஒப்புக்கொண்டோம் என்ற காரணத்தினால் அதை நடித்து கொடுத்தேன். முத்த காட்சிகள் எல்லாம் சொல்லாம பண்ணிட்டாங்க.. . அதனை நான் சற்று எதிர் பார்க்கல. ஆனால், படத்தின் கதைக்கு முக்கியம் என்று இயக்குனர் என்னை சமரசம் செய்தார்.
கடைசியாக, படம் ரிலீஸ் ஆன பிறகு தான் தெரிந்தது அதெல்லாம் மிகவும் மோசமாக இருந்தது. இப்போது அந்த படம் என்ன அந்த இயக்குனர் யார் என்றெல்லாம் கூற விரும்பவில்லை இது எனக்கு கசப்பான அனுபவமாக இருந்தது என கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். குறிப்பாக அவருடன் அறிமுக பாடலில் நடனம் ஆட வேண்டும் என்று கேட்டார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மிகவும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன். குருவி படத்தில் விஜய்யுடன் நடனமாட வேண்டிய காட்சி.
படத்தை ஒப்புக்கொண்டேன். ஆனால், சில மாதங்கள் கழித்து தான் அந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அப்போது, நான் கர்ப்பமாகி விட்டேன். மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததால் நடனம் ஆடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.
ஆனால், நடிகர் விஜய்யின் படம் என்பதால் படத்திலிருந்து விலக மனம் வரவில்லை. எனவே, ஒரு மாடல் அழகிய போல அங்கும் இங்கும் நடப்பது போன்ற காட்சிகள் மட்டும் சில நிமிடங்கள் நடித்திருந்தேன்.
இது எனக்கு ஏமாற்றமான ஒரு அனுபவமாக இருந்தது. நடிகர் விஜய்-யை South Indian Hrithik Roshan என்று கூறலாம். அவருடன் நடனம் ஆட வேண்டும். அதற்கெல்லாம் தயாராகிக் கொண்டிருந்தேன்.
ஆனால் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் நான் கர்ப்பமாகி விட்டேன் என்பது எனக்கு ஒரு சிறிய ஏமாற்றமாக இருந்தது என கூறி இருக்கிறார் மாளவிகா. M
41 minute ago
54 minute ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
54 minute ago
23 Aug 2025