2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இறுதித் திரைப்படம்

George   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்த்தி அகர்வால் நடித்த கடைசி திரைப்படமான ஒபரேஷன் கிரீன் ஹன்ட் திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி வெளிவருகிறது

தமிழில் பம்பரக்கண்ணாலே திரைப்படத்தில் நடித்தவர் ஆர்த்தி அகர்வால். தெலுங்கு, ஹிந்தி மொழியில் 50 திரைப்படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவில் தங்கியிருந்த ஆர்த்தி அகர்வால், அங்கு உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தார்.

அவர் நடித்த கடைசி திரைப்படமான ஒபரேஷன் கிரீன் ஹன்ட் திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி வெளிவருகிறது.
தெலுங்கு, ஹிந்தியில் தயாரிக்கப்பட்ட இந்தப் திரைப்படம் தமிழ், மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளிவருகிறது. 2009ஆம் ஆண்டு இந்திய இராணுவம் ஒபரேஷன் கிரீன் ஹன்ட் என்ற பெயரில் 5 மாநிலங்களில்; தீவிரவாதிகளை வேட்டையாடியது.

இதில் பல இராணுவ வீரர்களும, பொதுமக்களும் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தப் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

பல வருடங்களாக தணிக்கை குழுவில் போராடிக் கொண்டிருந்த இந்தத் திரைப்படம். இப்போதுதான் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .