2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இறைவன்’ படத்தில் திடீர் மாற்றம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெயம் ரவி நடிப்பில்  இயக்குனர் அகமது இயக்கத்தில் உருவான 'இறைவன்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் கலவையான விமர்சனத்தையே பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது படக்குழுவினர் திடீர் மாற்றம் செய்துள்ளனர். இந்த படம் 14 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டு திரையிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் திருப்தி அடையாத நிலையில் 14 நிமிட காட்சிகள் ட்ரீம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகு 'இறைவன்’ திரைப்படத்தின் வசூலில் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தை ‘எங்கேயும் எப்போதும்’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X