2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

இலங்கை இயக்குனரின் ’பேரடைஸ்’ விருதுகளை அள்ளிக்குவித்தது

Mayu   / 2024 ஜூன் 24 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர், ரோஷன் மேத்யூ இவரது சமீப காலத்திய படங்கள் ஓரளவு வெற்றியைப் பெற்று வருகின்றன. ரோஷன் மேத்யூவும், மலையான நடிகைகளில் ஒருவரான தர்ஷனா ராஜேந்திரனும் இணைந்து நடித்துள்ள படம், 'பேரடைஸ்', இந்தப் படத்தை இயக்கியிருப்பவர், இலங்கையைச் சேர்ந்த பிரபல சினிமா இயக்குனரான பிரசன்ன விதனாகே. இவர் இலங்கையில் பல விருது படங்களை இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில் இவரது இயக்கத்தில் இலங்கையிலேயே உருவாக்கப்பட்ட, பேர டைஸ்' திரைப்படமும், பல விருதுகளை குவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் ரியாவில் மாதம் 7-ஆம்  திகதி, தென் கொரியாவில் நடந்த பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப்படம் திரையிடப்பட்டது.

அங்கு சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றது. அதே போல் ஆசியா சினியா விருதான விசோல் சர்வதேச திரைப்பட விருதும், இந்த படத்திற்கு கிடைத்திருக்கிறது. தவிர மும்பை சர்வதேச திரைப் பட விழா, நியூயார்க் சர்வதேச திரைப்படவிழா, சிட்டி திரைப்பட விழா ஆகியவற்றிலும் பேர டைஸ்' திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டு, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது.

இந்தியாவின் கேரள மாநிலத் தில் இருந்து, தங்களின் 5-வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக ஒரு தம்பதியர் இலங்கை செல்கின்றனர். அதிக சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ள இலங்கையில், ஒரு மலை கிராமப் பகுதியில் அவர்கள் தனி வீடு ஒன்றில் தங்குகின்றனர். அவர்கள் சென்ற நேரத்தில், இந்த மலைக் கிராமத் தில் ஒரு பிரச்சினை உருவாகி, போராட்டம் வெடித்திருக்கிறது.

அந்த இடத்தில் அந்நிய நாட்டைச் சேர்ந்த இந்திய தம்பதி களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், அதனால் கணவன் - மனைவிக்குள் வரும் விரிசல்களையும் வெளிப்படுத்தும் விதமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

பல விருதுகளை குவித்த காரணத்தால், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பேரடைஸ்' திரைப்படம், எதிர்வரும் 28-ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X