2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

உடல் நலக்குறைவால் இளம் இசையமைப்பாளர் மரணம்

Freelancer   / 2024 மே 03 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராக்கதன், மேதகு உள்ளிட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய பிரவீன் குமார், உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இதையடுத்து அவசர சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி காலமானார். இவருக்கு வயது 28.

இளம் வயது இசையமைப்பாளரான அவரின் மறைவு, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவிற்கு இரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X