2025 மே 16, வெள்ளிக்கிழமை

உத்தமவில்லனுக்கு 5 விருதுகள்

George   / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துவரும் சர்வதேசத் திரைப்பட விழாவில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் திரைப்படத்துக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்தத் திரைப்படமாக உத்தம வில்லன் தெரிவானதுடன் சிறந்த நடிகர் (கமலஹாசன்), சிறந்த இசையமைப்பாளர் (ஜிப்ரான்), சிறந்த பாடல்கள் (ஜிப்ரான்), சிறந்த ஒலி வடிவமைப்பு (குணால் ராஜன்) ஆகிய 5 விருதுகள் உத்தம வில்லனுக்கு கிடைத்துள்ளது.

இதேபோல ரஷ்யன் சர்வதேசத் திரைப்பட விழாவிலும் உத்தம வில்லன் சிறந்த இசையமைப்புக்கான விருதை பெற்றுள்ளது.
உத்தம வில்லன் திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமி தயாரித்ததுடன் கமல், பூஜாகுமார், எண்ட்ரியா, கே.பாலச்சந்தர் ஆகியோர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .