Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தமிழ்மிரர் விமர்சனக்குழு
தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருக்கும் பேய் திரைப்படங்களின் வரிசையில் சற்று வித்தியாசமாக கதையை சொல்ல முயற்சித்திருக்கின்றது உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி திரைப்படம்.
நாயகனாக தீபக் பரமேஷ், நாயகியாக ஜெக்குலின் பிரகாஷ் மற்றும் பேய் சிறுமியாக அனு நடித்திருக்கின்றனர். ஸ்ரீநாத் இராமலிங்கம் இயக்க, சிவா சரவணன் இசையமைத்துள்ளார். திரைப்படத்துக்கு மனீஷ் மூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காதலர்களான தீபக்கும் ஜெக்லினும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெக்லின் கர்ப்பமடைகின்றார். திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொண்டால் பிரச்சினை ஏற்படும் கர்ப்பத்தை கலைக்கலாம் என தோழி அறிவுரை கூறுகிறார். ஆனால், தீபக்கின் மீதான காதலால் கருவை கலைக்க ஜெக்குலின் விரும்பவில்லை.
ஜெக்குலின் வயிற்றிலிருக்கும் குழந்தை மீது, தந்தையான தீபக் அளவு கடந்த பாசம் வைத்துள்ளதுடன் பெண் குழந்தைதான் பிறக்கும் என் ஆசையோடு காத்திருக்கின்றார். இந்நிலையில் திடீரென ஒருநாள் தீபக்; தனது தொழிலை இழக்க நேரிடுகின்றது.
அதிலிருந்து தீபக்-ஜெக்குலிக் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுகின்றது. இந்நிலையில் நிறைமாத கருவை கலைத்துவிடும்படி தோழி, ஜெக்குலினிடம் கூறுகின்றார். அதனையடுத்து, குடும்ப வைத்தியரிடம் செல்ல பிரசவத்துக்கு 3 வாரங்கள் இருக்கும் கருவை கொலை செய்ய முடியாது என கூறிவிடுகின்றார்.
இந்நிலையில், தீபக் தொழில் பெற்று தருவதாக கூறும் நண்பனை பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்று விடுகிறார் . இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பிறக்கும் பெண் குழந்தையை தோழி, ஆசிரமம் ஒன்றுக் தூக்கிச் சென்று விடுகிறார்.
சில நாட்களின் பின்னர் சிங்கபூரிலிருந்து வரும் தீபக், தனகு குழந்தை எங்கே என கேட்க குழந்தை இறந்தே பிறந்தாக ஜெக்குலினும் தோழியும் கூறுகின்றனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடையும் தீபக் கோபத்துடன் வீட்டை விட்டு சென்று விடுகின்றார்.
இநநிலையில், 8 வருடங்கள் கடந்து ஜெக்குலினின் தோழி மர்மமான முறையில் இற்ந்துவிடுகின்றார். அத்துடன் 8 வயது பெண் குழந்தையின் ஆவி தீபக் மற்றும் ஜெக்குலினை பயமுறுத்துவதுடன் கொலை செய்ய முயற்சிக்கின்றது.
ஆசிரமத்தில் விடப்பட்ட குழந்தை என்ன ஆனது, ஆவியாக திரியும் பெண் குழந்தை யார், தீபக் மற்றும் ஜெக்குலினை கொலை செய்ததா? குழந்தை மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருக்கும் தீபக் தனது குழந்தையுடன் சேரந்தாரா? என்பதை மிகுதி கதை.
பேய் திரைப்படங்களுக்கே உரிதான திகிலுடன் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள், பேய் திரைப்படம் என்பதால் திரைப்படம் முழுவது இருட்டை வலிந்து புகுத்தியிருக்கிறார்கள். முதல் பாதித் திரைப்படம் சற்று தொய்வை ஏற்படுத்தியுள்ளதுடன் காட்சிகள் சற்று இழுவையாக அமைந்துள்ளன.
ஆனால், இந்தக் குறையை இரண்டாம் பாதியில் சரிசெய்துள்ளார் இயக்குநர். விறுவிறுப்பாக நகரும் இரண்டாம் பாதி, பார்வையார்களை அப்படியே கட்டிப்போட்டு விடுகின்றது.
அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான உறவை பற்றிய கதை என்று ஆரம்பத்தில் விளம்பரம் படுத்தியிருந்தாலும் திரைப்படத்தில் அப்பா - மகள் பாசம் தொடர்பான காட்சிகள் குறைவு, அதை எதிர்பார்த்து சென்றவர்கள் சற்று ஏமாற்றமடைந்திருக்கலாம்.
காதலனாகவும் சரி, ஒரு தந்தையாகவும் சரி தீபக் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜெக்குலின் வயிற்றில் தனது குழந்தை உருவானதை அறிந்து அதனிடம் பேசும் போதும் சரி, குழந்தை இறந்துவிட்டதாக அறியும் போது தனது உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தாயாகவும் காதலியாகவும் நடிகை ஜெக்குலின் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். தீபக்கை காதலிக்கும் போதும் தீபக் வெளிநாடு சென்ற பின்னர் தனிமையில் தனது இயலாமையை நினைத்தும் கருவை அழிக்கவும் மனமில்லாமல் குழந்தையை பெற்று அதனை தனது தோழியிடம் கொடுத்துவிட்டு அழும்போதும் தாய்கு உரிய பாசத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
பேயாக வரும் சிறுமியும் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளதுடன் தந்தையின் பாசத்துக்காக ஏங்கும் காட்சிகளில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.
பேயோட்ட வரும் மைம் கோபி தனது உருவத்தாலும் குரலாலும் பயமுறுத்துகிறார். கையில் மணியுடன் பேயோட்ட அவர் வரும் காட்சிகள் இரசிக்க வைக்கின்றன. இவர்களுடன் நடித்த குணாலன் மோகன், மோர்ணா அனிதா ஆகியோரும் தனது பங்கை அழகாக செய்துள்ளனர்.
முதலில் தப்பு செய்து விடுவதும் பின்னர் அதற்காக திருந்தி அழுவதும் மனிதனின் இயல்பான நிலை இருந்தாலும் இதனால் யாரோ ஒருத்தர் எங்;கோ ஒரு மூலையில் பாதிக்கப்பட்டிருக்கலாம். குhதல் வேகத்தில் ஆண்-பெண் தப்பு செய்துவிடுவதும் அதன்காரணமாக ஒன்றும் அறியாத சிறு குழந்தை பாதிக்கப்படும்வதுமான இன்றைய யதார்த்த நிலையை அழகாக காட்டியுள்ளார்.
சிவா சரவணன் இசை சற்று மிரட்டுகின்றது ஆனால் பின்னணி இசையில் சற்று கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம். மனீஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவு பார்பவர்களை பயமுறுத்துகின்றது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம்.
மொத்தத்தில், உனக்கென்ன வேணும் சொல்லு இன்னும் சற்று அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago