Editorial / 2020 மே 12 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்கு விதிகளை மீறியதாக பொலிவுட் நடிகை பூனம் பாண்டே கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீது மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மே 17ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த நிலையில் காரணமின்றி மும்பை மரைன் டிரைவ் பகுதியில் காரில் சுற்றியதற்காக பூனம் பாண்டேயை கைது செய்து பின்னர் மும்பை பொலிஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
பூனம் பாண்டே மற்றும் சாம் அஹமத் ஆகிய இருவர் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .