J.A. George / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த நவம்பர் 25ஆம் திகதி வெளியான சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் முதல்நாளே 10 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் 25வது நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ‘மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி 75 நாட்கள் ஆகியும் இன்னும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை என்றும், ஒரு வெற்றித் திரைப்படத்துக்கே இந்த நிலைமை என்றால் மற்றத் திரைப்படங்களின் நிலையை என்ன சொல்ல? என்றும், இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்வது? என்றும் கேட்டுள்ளார்.
மேலும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் செல்வதில் என்ன தப்பு இருக்குனு யோசிக்க வைக்கிறாங்க? என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026