Editorial / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் என்றவுடன் அனைவருக்கும் முதன்முதலில் ஓவியாவின் பெயர் தான் ஞாபகத்துக்கு வரும்.
ஓவியா மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் அன்பு வைத்தது போலவே அவரும் தனது ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
இந்த நிலையில் ஓவியாவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான சான்வி என்பவர் திடீரென அண்மையில் மரணம் அடைந்தார்.
அவர் மரணமடைவதற்கு முன் ஒரு முறையாவது ஓவியாவை பார்க்கவேண்டும் என்று ஆசை கொண்டு இருந்தாராம். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே அவர் இறந்துவிட்டார்
இதுகுறித்து தகவலறிந்த ஓவியா உடனடியாக தன்னுடைய தீவிர ரசிகையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். அத்துடன், சான்வியின் பெற்றோர்களை தான் சந்திக்க விரும்புவதாகவும், அவர்களை தொடர்புகொள்ள தனக்கு யாராவது உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார்.
--
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .