2025 மே 17, சனிக்கிழமை

காதல் பிரிவில் வாடும் எமி

George   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை எமி ஜெக்சன் தனது காதலன் ஜோர்ஜை பிரிந்ததை நினைத்து மிகவும் கவலையில் உள்ளாராம்.

லண்டனில் பிறந்து வளர்ந்தவர் எமி ஜாக்சன். மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது விஐபி-2 மற்றும் விஜய் 59, கெத்து ஆகிய திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டே சென்னைக்கு வந்த எமிஜெக்சன், கடந்த ஐந்து வருடங்களாக தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், விண்ணைத்தாண்டி வருவாயா ஹிந்தி பதிப்பான ஏக் திவானா தா என்ற திரைப்படத்தில் நடித்தபோது, நாயகனான பிரதீப் பாப்பரை காதலித்ததோடு, அவரது பெயரை தனது உடம்பிலும் பச்சைக்குத்திக்கொண்டார். ஆனால் அந்த திரைப்படத்தில் நடித்து முடித்ததோடு அவர்களது காதலும் முறிந்து போனது.

ஆனால், அப்போது பெரிதாக பீல் பண்ணவில்லை எமி. அதன்பிறகு லண்டனைச்சேர்ந்த ஜோர்ஜ் பனாயிடோ என்பவரை இரண்டாவதாக காதலித்தார். லண்டனில் அவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டார்.

ஆனால், இப்போது தான் வெளியிட்ட அந்த புகைப்படங்களை தானே நீக்கி விட்டார் எமிஜெக்சன். காரணம், எமிஜெக்சனை ஜோர்ஜ் காதலித்தமைக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து விட்டார்களாம். அதனால் பெற்றோருக்காக காதலி எமியை கட் பண்ணி விட்டாராம் ஜோர்ஜ்.

இதையடுத்து, லண்டனைப் பொறுத்தவரை காதலிப்பது, பிரிவதெல்லாம் ரொம்ப சாதாரணமான விசயமாக கருதப்பட்டு வந்தாலும், சில ஆண்டுகளாக இந்திய கலாசாரத்தில் வாழ்ந்து பழகி விட்ட எமிஜெக்சன், காதலர் ஜோர்ஜை தான் பிரிந்து விட்டதாக சிலரிடம் சொல்லி ரொம்பவே கவலை படுகின்றாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .