Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
George / 2016 நவம்பர் 23 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடக இசை சாம்ராஜ்யத்தின் இமயம் தொட்ட பால முரளி கிருஷ்ணாவின் உடல், சென்னை பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கர்நாடக சங்கீதத்தின் இசை மேதையாக திகழ்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா. பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்த பாலமுரளி கிருஷ்ணா, சாமான்ய மக்களின் மனங்களையும் தனது தெய்வீக குரலால் கொள்ளை அடித்தார்.
தனது 8 வயதில் முதல் தியாகராஜ ஆராதனா நிகழ்ச்சியை விஜயவாடாவில் அரங்கேற்றினார். இவர் 15 வயதிற்குள் 72 மேள கர்த்தாக்களையும் ஆளும் திறமையும் அவற்றை பயன்படுத்தி கிருதிகளை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. நேற்று இவர் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். இவரது மரணம் இசை உலகில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கர்நாடக இசை கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் சென்னையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு கமல், இளையராஜா, சிவக்குமார், ராஜேஷ், எஸ்வி.சேகர், சுதா ரகுநாதன், கணேஷ் வைத்தியா, மஹதி, சைலஜா, சங்கர் கணேஷ், கேஜே யேசுதாஸ், எஸ்ஏ.ராஜ்குமார், அருணா சாய்ராம், தீனா உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்களும், வைகோ, ஜிகே வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இவர்கள் தவிர முதல்வர் ஜெயலலிதா, திமுக., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும், திரைபிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
பின்னர் நண்பகலில் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
பாலமுரளி கிருஷ்ணா, இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவர் உருவாக்கி தந்த இசையும், அவர் தந்த பாடல்களும் இந்த உலகம் உள்ள வரை என்றும் ஒலித்து கொண்டிருக்கும் என்பது மட்டும் திண்ணம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
38 minute ago
20 May 2025