Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமா நேர்காணல் ஒன்றின் இடையே, காவிரிப் பிரச்சினைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வியால் கோபமடைந்த நடிகர் பிரகாஷ்ராஜ், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
பிரகாஷ்ராஜ் நடித்துள்ள கன்னட திரைப்படமான “இதொல்லே ராமாயணா” விரைவில் வெளிவுள்ளது இந்த திரைப்படம் தொடர்பாக கன்னட தனியார் தொலைக்காட்சியின் பெண் தொகுப்பாளர், பிரகாஷ்ராஜை நேர்காணல் செய்தார்.
நேர்காணலின் போது, “காவிரி பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன?, இதனால் பாதிக்கப்படுவது கர்நாடகமா, தமிழ்நாடா?” என்று கேட்டார். இதனால் பிரகாஷ்ராஜ் ஆத்திரமடைந்துவிட்டார்.
“நான் திரைப்பட நடிகன் ‘இதொல்லோ ராமாயணா’ திரைப்படத்தை பற்றித்தான் பேச வந்திருக்கிறேன். இது திரைப்படத்தை பற்றிய நிகழ்ச்சி, ஒரு நடிகனாக அந்த திரைப்படம் பற்றி பேசுகிறேன். காவிரி விவகாரம் என்பது அரசியல் ரீதியாக பெரிய விடயம். மிகவும் ஆழமானது. விவசாயிகள் பிரச்சினை வெறும் நீர் மட்டுமல்ல வேறு பல பெரிய பிரச்சினைகளும் உள்ளன. இதுபற்றி விரிவாக பேச வேண்டும்.
இதுபோன்ற சினிமா நிகழ்ச்சியில் காவிரி பிரச்சினை பற்றி வாய்க்கு வந்தபடி கேள்வி கேட்காதீர்கள். இந்த பிரச்சினையை கிளப்புவதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது. மக்கள் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறார்கள். சினிமா நடிகனிடம் இதைபற்றி கேட்க வேண்டும் என்கிற கெட்டபுத்தி உங்களுக்கு ஏன் வருகிறது. இது நல்ல சமயம் இல்லை. தயவு செய்து பொறுப்புடன் இருங்கள்.”
இவ்வாறு கூறிவிட்டு சட்டையில் குத்தப்பட்டிருந்த ஒலிவாங்கியை பிடுங்கி எறிந்து விட்டு வெளியேறிய பிரகாஷ்ராஜ் வெளியேறும்போது, “உங்களுக்கு சமூக பொறுப்பு இல்லையா? வாய்க்கு வந்த விடயங்களையெல்லாம் கேட்டு ஏன் ஒளிபரப்புகிறீர்கள். எந்த நேரத்தில் என்ன கேட்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லையா? ஏன் இப்படி கேட்கிறீர்கள். நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன். இங்கு இருப்பவனும் நடிகன்தான் அங்கு இருப்பவனும் நடிகன்தான். என் பேட்டியை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்புங்கள்” என்று கூறிவிட்டு கோபத்துடன் சென்றுவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
41 minute ago
43 minute ago