J.A. George / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பிக் பாஸ் ஷோவின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் அனிதா சம்பத் தன்னுடைய அம்மாவை பற்றி பேசி கண்ணீர் விட்டிருக்கிறார்.
நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த இருவர், பிடிக்காத இருவர் என தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஹார்ட் மற்றும் ஹார்ட் பிரேக் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
அதன் படி அனிதா சம்பத் அறந்தாங்கி நிஷாவுக்கு ஹார்ட் கொடுத்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் கண்ணீர் விட்டு கூறி இருக்கிறார்
#Day2 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/jL9eErcjS2
— Vijay Television (@vijaytelevision) October 6, 2020
"அறந்தாங்கி நிஷா எனக்கு அம்மா மாதிரி. என் அம்மா ரொம்ப டார்க் ஆக இருப்பார்கள். நகை கூட போட மாட்டார்கள். அப்படி போட்டால் என் கலர் இன்னும் டார்க் ஆக தெரியும் என அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
ஸ்கூல், காலேஜ், பெற்றோர்-ஆசிரியர் மீட்டிங் என்றால் கூட வருவதற்கு கொஞ்சம் யோசிப்பார்கள். கருப்பாக இருப்பது inferior ஆன விஷயம் என இல்லாமல். அதைக் காமெடியாக மாற்றி அனைவரது நடுவிலும் ஒரு ஸ்டாராக இருப்பவர் நிஷா.
என் அம்மாவும் நிஷா அக்காவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்" என கூறி கண்ணீர் விட்டு இருக்கிறார் அனிதா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .