J.A. George / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தயாரிப்பில் உருவான திரைப்படம்தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’.
கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. புதுமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கி இருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் கதை திருட்டு சர்ச்சையில் இந்தத் திரைப்படம் சிக்கியது. கடந்த 2016ஆம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘ரங்கா படாங்கா’ திரைப்படத்தின் கதையை தழுவி தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’திரைப்படம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த விடயம் சூர்யா கவனத்துக்குகு சென்றதும், அவர் இயக்குநரை அழைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்மந்தப்பட்ட மராத்தி திரைப்படத்தின் குழுவினரை அழைத்து அவர்களுக்கு உரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து இருக்கிறார் சூர்யா.
19 minute ago
49 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago
51 minute ago
2 hours ago