2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கமலுடன் ஜோடி சேரும் நதியா?

Ilango Bharathy   / 2021 ஜூன் 28 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் கடந்த 2013 ஆண்டு வெளியாகி வசூல் குவித்த திரைப்படம் திரிஷ்யம். இத் திரைப்படம்  தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது.

இதில் கமல்ஹாசன், கௌதமி கலாபவன் மணி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2ஆம்  பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அந்தவகையில் இத் திரைப்படமும் தமிழில் ‘பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கௌதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை நதியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இக்கூட்டணி உறுதியானால், நடிகை நதியா, கமலுடன் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X