J.A. George / 2021 நவம்பர் 09 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை.
மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 திரைப்படத்தை கிடப்பில் போட்ட இயக்குநர் ஷங்கர், ராம்சரணை வைத்து தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க தயாரானார்.
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, வருகிற டிசெம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இதற்காக நடிகர் கமல்ஹாசன் 100 நாட்கள் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
18 minute ago
45 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
45 minute ago
1 hours ago
6 hours ago