2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

களைகட்டும் மதுரை... ’லியோ’ இசை வெளியீடு எங்கே?

J.A. George   / 2023 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையை தாண்டி வேறு ஒரு நகரில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 29 அல்லது 30 இல் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் நடித்த ’வேலாயுதம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மதுரை ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவால் களைகட்டப் போகிறது.

மேலும் ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரைலர் ஒக்டோபர் இரண்டாம் திகதி காந்தி ஜெயந்தி தினத்தன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X