2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கஷ்டமா இருந்துச்சு... நொந்து போன காஜல் அகர்வால்!

J.A. George   / 2023 நவம்பர் 15 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

1996ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரது நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான திரைப்படம் வெளியான ‘இந்தியன்’.

தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாவது பாகத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க்கும் இப்படத்திற்கு இசையமையாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். 

இந்த திரைப்படம் 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் ‘இந்தியன் 2’ படத்திற்காக தான் உடல் ரீதியாக நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக, நடிகர் ராணாவுடன் நடந்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அதில் பேசிய காஜல், “எனக்கு பிரசவம் முடிந்த மூன்று மாதத்திற்குள் நடிப்பதற்காக வந்துவிட்டேன். இந்தியன் 2 படத்திற்கு வித்தியாசமான சண்டை காட்சிகள் தேவை என்பதால் நான் களரி தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டேன்.” என்றார்.

மேலும், “அதேபோல மற்றொரு படத்திற்காக குதிரை சவாரியும் செய்தேன். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்தேன். அது எனக்கு உடல் ரீதியாக மிகவும் கஷ்டமாக இருந்தது. நிறைய உடல் வலிகளை சந்தித்தேன். இருந்தும் இதனை முழுமையாக கற்றுக்கொண்டேன். அதன் பிறகு எனக்கு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது” என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X