2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

காணொளி வௌியிட்ட நடிகைக்கு எதிர்ப்பு

Mayu   / 2024 ஜனவரி 10 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 க்ரைம் த்ரில்லர் தொடரான டேஞ்சரஸ் மூலம் OTT அறிமுகமான பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, ஞாயிற்றுக்கிழமை (07) திகதி தனது 45வது பிறந்தநாளை கணவர் கரண் சிங் குரோவர் மற்றும் மகள் தேவி பாசு சிங் குரோவர் ஆகியோருடன் மா​லைதீவில் கொண்டாடினார்.

மாலத்தீவு பயணத்தை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என பிரபலங்கள் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், நடிகை பிபாஷா பாசுவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இந்தநிலையில், பிரதமர் மோடி  கடந்த 2 ஆம் திகதி இரண்டு நாட்கள் பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த அவர், ‘லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு  நான் வியப்படைவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த பயணத்தில்  140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக எவ்வாறு உழைப்பதுஎன்பது குறித்து சிந்தித்தேன்’ எனவும் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த பயணம் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றிருந்தது. 

இதனிடையே பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து  மாலத்தீவு நாட்டு அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு பதவி நீக்கம் செய்தது. இந்த சம்பவம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களுக்கு கண்டனங்கள் குவிந்தது. தொடர்ந்து மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்த இந்தியர்கள் பலரும் அந்த பயணத்தை ரத்து செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X