Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
ஆனால், கடைசியாக மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையானது மன அமைதி மட்டும்தான். அது இருந்தால் வேறு எதுவும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை என்று இந்த கொவிட்-19 காலத்தில் எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.
எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களைப் பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த
பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத் தான் நான் விரும்புகிறேன். எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி
இல்லாமல் போனால் என்ன பயன். இப்போது கொவிட்-19வால் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக் குமே புரிந்து இருக்கும்.இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொவிட்-19 ஊரடங்கால் இதன்
படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ‘ஆச்சார்யா’ என்ற தெலுங்கு படத்தில் சிரஞ்சீவி ஜோடியாகவும் நடிக்கிறார். ஒரு இந்தி படமும் கைவசம் உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .