Ilango Bharathy / 2021 ஜூலை 29 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் வேணு அரவிந்த்.
கே.பாலசந்தர் இயக்கிய ‘காதல் பகடை’, ‘காசளவு நேசம்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்த இவர், அதனைத் தொடர்ந்து நடிகை ராதிகாவுடன் வாணி ராணி, செல்வி, அலைகள் உள்ளிட்ட பல தொடர்களில் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார். இது தவிர பல்வேறு திரைப்படங்களிலும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேணு அரவிந்துக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது.
எனினும் அறுவை சிகிச்சை நிறைவடைந்த நிலையில், வேணு அரவிந்த் கோமா நிலைக்குச் சென்றுள்ளதாகவும், அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
23 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago