2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா அஞ்சனா என 2 மகள்கள் உள்ளனர்.  ஐஸ்வர்யா, விஷால் நடித்த பட்டத்து யானை’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சொல்லி விடவா’ என்ற படத்தில் நடித்தார்.

இப்போது அர்ஜுன் இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தம்பி ராமையா மகன் உமாபதி‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அடுத்து ‘மணியார் குடும்பம்’  ‘திருமணம்’ ‘தண்ணி வண்டி’ உட்பட சில படங்களில் நடித்தார்.

இதந்கமைய நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதியும் நடிகர் அர்ஜுனின் மகள்  ஐஸ்வர்யா காதலித்து வந்த நிலையில்,இருவீட்டு குடும்பத்தினரும் இவர்களது திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததை அடுத்து நிச்சயதார்த்தம் (27) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்த நிகழ்வில் இரண்டு குடும்பத்துக்கும் நெருங்கிய சொந்தங்கள் மற்றும்  நண்பர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .