Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
உசுபேத்தும் ரசிகர்கள்
வேதாளம் திரைப்படத்தின் முன்னோட்டம், 29ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், விரைவில் சென்சார் செல்லும் இத்திரைப்படம்; எப்படியும், ஏ சான்றிதழ் தான் வாங்கும் என, விஜய் ரசிகர்கள், அஜீத் ரசிகர்களை வலைதளங்களில் உசுப்பேற்றி வருகின்றனர்.
எகிறும் சேதுபதி மார்க்கெட்
நானும் ரௌடி தான் திரைப்பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி மார்க்கெட் ஏறுமுகத்தில் உள்ளது. கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத எக்ஷன் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் திரைப்படத்தில் நடிக்க, விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷின், வொண்டர் பார் திரைப்பட நிறுவனமும், தன் அடுத்தத் திரைப்படத்துக்காக விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளது.
பாகுபலி வதந்தீ
பாகுபலி பாகம் - 3 வரப் போகிறது என்று திடீரென கிளம்பிய வதந்திக்கு, இயக்குநர் ராஜமௌலி முற்றுப்புள்ளி வைத்தாலும், பாகுபலி என்ற உலகம் தொடர்ந்து வாழும். என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு மட்டும் தான் தெரியும் என வதந்தீக்கு, எண்ணெய் ஊற்றியுள்ளார்.
நவம்பர் முதல் இசை
ஆர்யா - அனுஷ்கா நடித்த, இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தின் இசை, நவம்பர் மாதம் முதலாம்; திகதி வெளியாகிறது. மரகதமணி இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், அடுத்த மாதம், 27ம் திகதி, 1,500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதேவேளை அன்றைய தினம், நடிகர் சூர்யாவின், பசங்க -2 திரைப்படமும் வெளியிடப்பட தயாராகியுள்ளது..
நானும் வில்லிதான்
எண்றதுக்குள்ள திரைப்படத்தில் சில காட்சிகளில் வில்லியாக வந்ததும் போதும், நடிகை சமந்தா, தனது அடுத்தடுத்த திரைப்படங்களில், நெகடிவ் கதாபாத்திரங்களை ஏற்கவுள்ளதாக கூறியுள்ளார்.
பழைய கூட்டணி
பிதாமகன் திரைப்படத்துக்கு பின்னர் பாலாவும், விக்ரமும் மீண்டும் இணையவுள்ளனர். தாரை தப்பட்டை திரைப்படத்தை முடித்துள்ள இயக்குநர் பாலா, விக்ரமைச் சந்தித்து, அடுத்தத் திரைப்படம் குறித்து பேசி உள்ளார். தற்போது விக்ரம், ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் முடிந்ததும், பாலா திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
ஜேடிகளுக்கான திரைப்படம்
'என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னுடைய மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தை பார்த்தேன்; மெய்மறந்து போனேன். ஒவ்வொரு ஜோடியும் இந்தத் திரைப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும்' என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு செல்வராகவன் திரைக்கதை எழுத, அவரது மனைவி இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
நட்டியின் போங்கு
சதுரங்க வேட்டை திரைப்படத்துக்கு பின் நடிகர் நட்டி, எங்கிட்ட மோதாதே திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக, போங்கு திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் ஜோடியாக ராய் லட்சுமி, பூஜா நடிக்கின்றனர். ரஜினியின் பிறந்த நாளான, டிசெம்பர் 12 அன்று படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
பொங்கி எழுந்த ஸ்ரீகாந்த்
பொறுத்தது போதும் பொங்கி எழு என்பது போல், நடிகர் ஸ்ரீகாந்தும், ஞாயிற்றுக்கிழமை முதல், டுவிட்டர் கணக்கு ஆரம்பித்துள்ளார்.
கேப்டனின் ஆர்வம்
விஜயகாந்த், தன் மகன் சண்முக பாண்டியனை, சகாப்தம் திரைப்படம் மூலம் ஹீரோவாக்கினார். ஆனால், அத்திரைப்படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. இந்நிலையில் அண்மையில், பாகுபலி திரைப்படத்தை பார்த்த கெப்டன், அதே போன்ற சரித்திர பின்னணி கொண்ட கதையில், மகனை நடிக்க வைப்பது மட்டுமின்றி, ஹீரோயினாக தமன்னாவை, ஒப்பந்தம் செய்யவும் ஆர்வம் கொண்டுள்ளாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago