2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சிம்புவை இயக்கும் பாலா

George   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோலிவூட் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரும், தேசிய விருது பெற்றவருமான பாலா, அண்மையில் 'குற்றப்பரம்பரை' கதையை இயக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் ஒருசில காரணங்களால் தாமதம் அடைந்ததால் புதுமுகங்கள் நடிக்கும் திரைப்படம் ஒன்றை அவர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில். இயக்குநர் பாலாவின் அடுத்த திரைப்படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளிவரும் என தெரிகிறது. மேலும், தற்போது அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X