2025 மே 14, புதன்கிழமை

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஹன்சிகா

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவகார்த்திகேயனுடன் முதன்முதலாக இணைந்து நடித்த மெகா நடிகை ஹன்சிகா. அவர் நடித்த பிறகுதான் மற்ற முன்னணி நடிகைகள் சிவகார்த்திகேயனுடன் நடிப்பதில் ஆர்வம் காட்டினர். தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.   

அதையடுத்து “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ரஜினி முருகன்” திரைப்படங்களை இயக்கிய பொன்ராம், சிவகார்த்திகேயனை மீண்டும் இயக்கும் திரைப்படத்தில் சமந்தா நடிக்கிறார். இந்த செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.   

மேலும், பொன்ராம் திரைப்படத்தை அடுத்து, “இன்று நேற்று நாளை”  இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் இந்த  திரைப்படத்தில் தமன்னா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது ஏற்கெனவே “மான்கராத்தே”வில் நடித்த ஹன்சிகா, மீண்டும் இணைவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து சிவ கார்த்திகேயனுடன் நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா என முன்னணி ஹீரோயினிகளாக ஜோடி சேருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X