2025 மே 17, சனிக்கிழமை

சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல் (வீடியோ)

George   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சிவகார்த்திகேயனை  நடிகர் கமல் ரசிகர்கள் தாக்கியதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவகார்த்திகேயனை இன்று ஞாயிற்றுக்கிழமை(20) காலை மதுரை விமான நிலையத்தில் வைத்து கமல் ரசிகர்கள் தாக்கியுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது தன்னை ரஜினி ரசிகர் என்றும் கமல் குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் திட்டித் தீர்த்தனர்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை சிவகார்த்திகேயன்,விழா ஒன்றுக்காக மதுரை வருவதாக கேள்விப்பட்ட கமல் ரசிகர்கள், மதுரை விமான நிலையத்தின் வாசலில் காத்திருந்தனர்.

விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியதாகவும், அவர்களை சிவகார்த்திகேயனின் பாதுகாவலர்கள் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு எதிராக கமல் ரசிகர்களும், கமல் ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து சிவகார்த்திகேயன் ரசிகர்களும் டுவிட்டரில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .