2025 மே 07, புதன்கிழமை

சங்கடத்தில் சமீரா

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகைகளிடம் வயதைக் கேட்டால் பிறந்த திகதியைத் தான் சொல்வார்கள். பிறந்த வருடம் ஒரு சிதம்பர ரகசியமாகவே இருக்கும். அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் அது தான் நிலவரம்.

நடிகை சமீரா ரெட்டிக்கு இரண்டு குழந்தை பிறந்துவிட்டது. கணவர், குழந்தைகள் எனச் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பது பற்றி அவர் இன்னும் யோசிக்கவில்லை. ஆனாலும் இணைய தளத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். சமீராவிடம் ஒரு ரசிகர், உங்கள் வயது என்ன? என்று கேட்டு தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார்.

ஆனாலும் சமாளித்து பதில் சொல்லி விட்டார். “ஆண்களிடம் வயதைக் கேட்கலாம் ஆனால் பெண்களிடம் வயதைக் கேட்கக் கூடாது. என் வயது 41 சந்தோஷமா? பெண்கள் எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

ஆனாலும் கண்கள் அருகே சுருக்கம் போன்றவை அவர்களை வயது அதிகமானவர்கள் போல் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை வயதும், உடல் எடையும் வெறும் நம்பர் தான். அச்சமில்லாமலிருங்கள்” என்றார் சமீரா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X