2025 மே 14, புதன்கிழமை

சந்தானம் ஜோடியாக 'மலர் டீச்சர்'

George   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ள திரைப்படத்தில் நடினை சாய் பல்லவி, சந்தானத்தின் ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படமான “பிரேமம்” திரைப்படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்த நடிகை சாய்பல்லவி, அந்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

இந்நிலையில், சாய்பல்லவி விரைவில் தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மணிரத்னம் இயக்கி வரும் “காற்று வெளியிடை” திரைப்படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் திடீரென சாய்பல்லவிக்கு பதிலாக அதிதி ராவ் அந்த  நடித்து வருகிறார்.

தற்போது சந்தானம் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

சந்தானம் அண்மையில், விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் '4G' திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதே நேரத்தில் செல்வராகவன் தற்போது “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் உள்ளார். இருப்பினும் சந்தானம்-செல்வராகவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .