S.Renuka / 2026 மார்ச் 08 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அவருடைய அரசியல் வருகை, குடும்ப பிரச்சினை, நடிகை திரிஷா உடன் கல்யாண நிகழ்வில் கலந்து கொண்டது என பல விஷயங்கள் இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளன.

இந்த நிலையில், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது இந்த விவகாரம் குறித்து ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பது, "விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும், அவருடைய அரசியல் வருகை பற்றியும் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. விஜயை நான் அறிந்தது ஒரு மரியாதையான, அமைதியான, மென்மையான இணை நடிகராக மட்டுமே. அவருடைய தாயாரைப் பற்றியும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதற்கும் மேலாக எனக்கு எந்த தனிப்பட்ட அறிவும் இல்லை.

சமீபத்தில் நான் ஒரு மேடையில் பேசிய சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, விஜயின் அரசியல் வருகைக்கும் இப்போது பேசப்படும் தனிப்பட்ட விஷயங்களுக்கும் தவறாக இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளிதழ் என்னிடம் கருத்து கேட்டபோது, மக்கள் தனிப்பட்ட விஷயங்களையும் அரசியல் செயல்பாடுகளையும் தனித்தனியாக பார்க்கத் தெரிந்தவர்கள் என்று தான் நான் கூறினேன். மேலும், இது தேர்தல் காலம் என்பதால் இந்த விஷயம் அளவுக்கு மீறி பெரிதாக்கப்படுகிறது என்றும் சொன்னேன்.

இன்னும் ஒரு விஷயம், பெண்களின் நலன் குறித்து உண்மையாக அக்கறை இருப்பின், நீதிக்காக போராட வழியில்லாமல், சட்ட உதவியோ பொருளாதார ஆதரவோ இல்லாமல், அடுத்த உணவு கூட உறுதியில்லாமல் வாழும் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் இதே அளவு கவனம் செலுத்தப்பட வேண்டாமா?இந்த அறிக்கை என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஏற்பட்ட தவறான புரிதலை சரி செய்யவும் மட்டுமே." என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக, விஜய் குறித்து வெளியான செய்திகளோடு இணைத்து சிலர் லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்ததாக முன்பே பரப்பியிருந்ததால், அதற்கு அவர் நேரடியாக விளக்கம் கொடுத்திருப்பது தெரிகிறது.
இதற்கிடையில் விஜயின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிய பல தகவல்கள் கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவி வருகிறது. விஜயும் மனைவி சங்கீதாவும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்ற தகவல்கள் முன்பே வெளியாகியிருந்தது. அதே நேரத்தில், சில ஊடகங்களில் விவாகரத்து தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் வைரல்:
இந்த எல்லா சர்ச்சைகளும் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், "நான் விஜயை பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை" என்று லட்சுமி ராமகிருஷ்ணன் நேரடியாக விளக்கம் அளித்திருப்பது தற்போது இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. அவரது பதிவை சிலர் பாராட்டி வருகிறார்கள். "ஒரு விஷயத்தை தவறாக புரிந்து கொண்டு தேவையில்லாமல் பரப்பக்கூடாது" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில் பார்க்கும்போது, விஜயின் குடும்ப வாழ்க்கை, அரசியல் வருகை, அதனைச் சுற்றி வரும் வதந்திகள், அதற்கு நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் தரும் விளக்கங்கள்-இவை அனைத்தும் சேர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
மொத்தத்தில் பார்க்கும்போது, விஜயின் குடும்ப வாழ்க்கை, அரசியல் வருகை, அதனைச் சுற்றி வரும் வதந்திகள், அதற்கு நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் தரும் விளக்கங்கள்-இவை அனைத்தும் சேர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
விஜய்யின் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும், அவருடைய அரசியல் வருகை பற்றியும் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
விஜயை நான் அறிந்தது ஒரு மரியாதையான, அமைதியான, மென்மையான இணை நடிகராக மட்டுமே. அவருடைய தாயாரைப் பற்றியும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதற்கும் மேலாக…
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .