J.A. George / 2023 நவம்பர் 14 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீபாவளி திருநாளை முன்னிட்டு கார்த்தியின் ‘ஜப்பான்’ கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா 2’ மற்றும் விக்ரம் பிரபு நடித்த ’’ரெய்டு’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியானது.
இந்த நிலையில் தீபாவளியை அடுத்து, சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவான ’பில்டப்’ என்ற படத்தின் படப்பிடிப்பு அண்மையில், முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு திகதி நவம்பர் 24 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. சரியாக தீபாவளி முடிந்து இரண்டு வாரம் கழித்து வெளியாக இருக்கும் இந்த படம் நகைச்சுவை ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
80 களில் ரஜினி, கமல் ரசிகர்களின் மோதல் குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் கலகலப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சந்தானம் ஜோடியாக ராதிகா ப்ரீத்தி நடித்த இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், சுந்தர்ராஜன், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
20 minute ago
27 minute ago
37 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
37 minute ago
44 minute ago