2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சந்தானம் நடிக்கும் புதிய படம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியாலயா அறிமுகமாகிறார்.

நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். பல படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

முக்கிய வேடத்தில் தம்பி ராமையா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் ஆகியோர் பாடல்களை எழுத, டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக், ரிலீஸ் திகதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X