2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சமந்தா -நாக சைத்தன்யா திருமணம் எப்போது?

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனன் மகன் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்ற தகவல் ஏற்கெனவே உறுதியாகியுள்ள நிலையில் திருமணத் திகதி குறித்துப் பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறன.

இந்நிலையில் நாகார்ஜூனன் இளையமகன் அகில் மற்றும் அவரது நீண்ட நாள் தோழி ஸ்ரேயாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாகார்ஜூன கூறியபோது, 'எனது இரண்டு மகன்களும் தங்களது வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதே நேரத்தில் திருமணத் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்த உண்மையான தகவலை நான் அறிவிக்கும்வரை அனைவரும் பொறுமை காக்கவேண்டும்' என்று கூறியுள்ளார்.

அனேகமாக நாகசைதன்யா-சமந்தா திருமணம் அடுத்த வருடம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X